Monday, November 23, 2009

பெண்கள் உரிமையையும் ஜனநாயகத்தையும் முன் நிறுத்துதல்

இந்த உலகமயமாகும் சகாப்தத்தில் மேம்பாடு ஒரு சிலருக்கு வலுவானதொரு வருமானத்தை ஈட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் பரந்ததொன்றாக இருக்க வேண்டும். அதாவது , நியாயமான கொள்கைகளையும் சமத்துவமிக்க ஜனநாயகத்தையும் , பொது விவகாரங்களில் பிரஜைகள் குரல் எழுப்பும் சந்தர்ப்பத்தையும் போட்டியிடும் உரிமையையும் , பொறுப்புள்ள அரசாங்கத்தைத் தேர்வு செய்யவும் கண்காணிக்கவும் சுதந்திரம் வழங்க வேண்டும்.


பெண்கள் மனித உரிமைத் திட்டம்

உலக மக்கள் தொகையில் பாதி பெண்களாவர். இருந்தும் இவர்களின் உரிமைகள் பொதுவாக கவனிக்கப்படாமல் பலமுறை வரையறுக்கப்பட்டுள்ளன. சமத்துவம் என்பது ஆண்களுக்குள்ள அதே உரிமைகள் தான் என கற்பனை செய்யப்படுகின்றன . இது அடிக்கடி சமத்துவமில்லாத பாதகமான நடைமுறைகளுக்குத் தான் இட்டு செல்கின்றன. உடல் அமைப்பு வித்தியாசங்களாலும் , பொறுப்புகளாலும் பெண்கள் அந்தஸ்து குறித்த ஒரு தலை பட்சமான கருத்துக்களாலும் , பொறுப்புகளாலும் , ஆண்களை விட பெண்களுக்கு மாறுபட்ட வாழ்க்கை கதைகளும் அனுபவங்களும் உள்ளன . இதனால் ஒரு பெண்கள் உரிமைத் திட்டத்திற்கான குறிப்பிட்ட தேவை உள்ளது .


பெண்களுக்கெதிரான அனைத்து விதமான பாதகங்களையும் களைவது மீதான ஒப்பந்தம் இந்த ஒப்பந்தம் பெண்களின் உரிமைகளுக்கான ஒரு விரிவான திட்டத்தை வழங்கியுள்ளது .

சரத்து 1 இன் படி பாதகங்கள் என்பது :-

.வேண்டுமென்றோ அல்லது மறைமுகமாகவோ புரியப்படுபவைகள் ; உதாரணத்திற்கு ,ஆணும் /பெண்ணும் சமம் என பாவிக்கும் சட்டங்களின் முடிவுகளையும் உள்ளடக்கும் .

.பெண்களுக்கு எதிரான எந்த ஒரு பாதக சூழ் நிலையையும் மதிப்பிடும் ஒரு முறையை வழங்குதல் .

.புதிதாகத் தோன்றும் பிரச்கனைகள் இந்த ஒப்பந்தத்தின் பகுதியில் தெளிவாக குறிப்பிட வில்லை .(உதாரணம் ,பெண்களுக்கு எதிரான வன்முறைகள் )

சமத்துவத்தை உறுதிப் படுத்தும் குறிப்பாக பெண்களின் உரிமைகளைப் பாதுக்காக்கும் சாதகமான சட்டங்களையும் கொள்கைகளையும் அமுலுக்குக் கொண்டுவரும் பொறுப்பு அரசாங்கத்தினுடையது என இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை கொள்கை வலியுறுத்துகின்றது .

மலேசிய அரசாங்கம் உடன்பாடான நடவடிக்கைகளை எடுத்துள்ளது தெரிந்ததாகும் . அவற்றில் இவைகள் இணைக்கப்பட்டுள்ளன :

.1989 இல் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் மீதிலான தேசிய கொள்கைகயும் 1997 ஆம்
ஆண்டு செயல்திட்ட அமலாக்கமும்
.மகளிர் அமைச்சு ,(பிறகு மகளிர் குடும்ப மேம்பாட்டு அமைச்சு என மாற்றம் கண்டது .(தற்போது, மகளிர்,குடும்ப ,சமுக மேம்பாட்டு அமைச்சு என அழைக்கப்படுகிறது ) 2001 இல் அமைக்கபட்டது .

. 2001ல் கூட்டரசு சட்டதிட்டங்களில் சரத்து 8(2)இன் திருத்தத்தில் பாதகங்களை தடைசெய்யும் தலமாக ஆண்/பெண் சமநிலை இணைக்கப்பட்டுள்ளது .

இருப்பினும் பாதகமான சட்டங்கள் தொடர்ந்து அமுலில் உள்ளன .அதோடு வழக்கமான சமத்துவம் அளித்தலுக்கும் பெண்கள் அனுபவிக்கும் உண்மையான உரிமைகளுக்கும் இடையே இடைவெளிகளும் உள்ளன .


பிரச்சனைகள்

.பொதுவாக ,தீவிரவாத செயல்கள் என்னற்ற அடக்குமுறைச் சட்டங்களால் அடக்கப்படுகின்றன .இவை அடிப்படை உரிமை வாழ்வைத் தடை செய்கிறது . உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் ,அச்சக பிரசுர சட்டம் ,பொது ஒழுங்கும் அவசர கால சட்டமும் இவற்றில் அடங்கும் .

.கூட்டரசு அரசியல் சாசனம் திருத்தப்பட்டிறுப்பினும் முரண்பாடாகவும் பகிரங்கமாகவும் பெண்களுக்கெதிரான பாதகங்கள் இன்னும் நடைப்பெறுகின்றன. உதாரணத்திற்கு பகுதி 3 , சரத்து 15(1) ஒரு மலேசிய ஆண்மகன் ஒரு வெளிநாட்டு பெண்ணை மணந்து கொண்டால் அவன் மகன் மலேசியாவுக்கு வெளியே பிறந்தாலும் கூட தன் நட்டு பிரஜையாக முடியும் என குறிப்பிட்டுள்ளது .ஆனால் பெண்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது .

.இஸ்லாமிய குடும்ப சட்டம் (கூட்டரசு பிரதேசம் ) (திருத்தம் ) 2005ம் ஆண்டு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது .மசோதாவில் பாதகமான திருத்தங்கள் உள்ளன .பகுதி 23(3) லும் 24(4) (௮ )விழும் ஆண்கள் எளிதாக பலதரங்களை கொண்டிருக்க உதவுகின்றன .பகுதி 23 (9) (௮ ) ஒரு கணவன் பலதார திருமணம் செய்துகொள்ளும்போது ஒரு மாணவி ஜீவனாம்சம் பெறுவதையோ அல்லது சொத்து பிரிப்பதையோ தேர்வு செய்ய வற்புறுத்தப்படுகிறாள் .

.வழக்குமன்றத்தின் இரட்டை சட்டப்பூர்வ முறை சொந்த விசயங்களில் முஸ்லிம்களுக்கும் முஸ்லீம் அல்லதவர்கலுக்குமிடையே வேறுப்படுகின்றன.ஒரு வாழ்க்கைத்துணை மதம் மாறிய சூழ்நிலையில் பிள்ளைகள் பராமரிப்பு ,மதம் சொத்துரிமை பாதிக்கப்படுகின்றன .

.பெண்களுக்கெதிரான வன்முறைகளிலிருந்து பாதுக்கக்கும் சட்டங்கள் குறிப்பாக பலாத்காரம் ,வீட்டு வன்முறைகள் ,பாலியல் தொல்லைகள் போன்ற விவகாரங்களில் தொடர்ந்து அதிருப்தியளிக்கின்றன

.பொது சேவையில் முடிவெடுக்கும் பதவிகளில் உள்ள பெண்களின் எண்ணிக்கை அரசாங்கத்தின் இலக்கான குறைந்த பட்ச 30%க்கும் குறைவாகவேயுள்ளது


மலேசிய அரசாங்கத்தின் கடமை
பெண்களின் உரிமைகளை சக்தி வாய்ந்த அமலாக்கத்திர்க்குத் தடையாக இல்லாமல் சாதகமான ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டுகோள் விடுக்கின்றது .மலேசிய அரசாங்கம் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,செனட்டர்கள் இந்த முக்கிய விவகாரங்களில் பங்காற்ற முடியும் .

.கொள்கை அளவிலும் செயலாக்கத்திலும் பெண்கள் உரிமைகளுக்கும் ஜனநாயகத்திற்கும் ஒத்துழைத்தல் .

.இந்த பிரச்சனைகளையும் பரிந்துரைகளையும் தங்களது தேர்தல் அறிக்கையிலும் தொகுதி நிகழ்ச்சிகளிலும் இணைதல்

.பெண்கள் உரிமைகள் அமலாக்கத்திலும் ஜனநாயக செயலாக்கத்திலும் மேம்பாட்டையும் இடைவெளிகளையும் கண்காணித்தல்.

Sunday, November 22, 2009

16 நாட்கள் பெண்கள் வன்முறையை எதிர்ப்போம் பிரச்சாரம்




பிரச்சாரத்தின் அறிமுகம்

16 நாட்கள் பெண்கள் வன்முறையை எதிர்ப்போம் என்பது உலகளவில் நடத்தப்பட்டு வரும் பிரச்சாரமாகும். இந்தப் பிரச்சாரமானது 1991- ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் தலைமை மையத்தினால் தொடங்கப்பட்டது. இந்தப் பிரச்சாரம் நவம்பர் 25 - அனைத்துலக பெண்கள் வன்முறையை எதிர்ப்பு தினத்திலிருந்து டிசம்பர் 10 - அனைத்துலக மனித உரிமை தினம் வரை கொண்டாடப்படும். பெண்கள் வன்முறை மனித உரிமைகளில் ஒன்று என்பதையும், பெண்களின் உரிமை பறிக்கப்பட்டால் அது மனித உரிமையைப் பறிப்பதற்கு சமம் என்பதையும் இந்தப் பிரச்சாரம் பிரதிப்பலிக்கிறது.

பிரச்சாரத்தின் நோக்கம்

வரும் காலத்தில் பெண்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான சூழ்நிலை வேண்டியதின் அவசியத்தைப் பற்றி மக்களுக்கும் பெண்களுக்கும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் பெண்கள் பல்வேறான வன்முறைகளை தங்களின் வாழ்நாட்களில் எதிர்நோக்கி வருகின்றனர். ஆகையால், அவர்கள் நன்றாக வாழ்வதற்கும், பாதுகாப்பாக வேலை செய்வதற்கும், வாழ்க்கையில் உயர்வதற்கும் பாதுகாப்பான சூழ்நிலை மிகவும் அவசியம். எனவே, மக்கள் அனைவரும் தங்கள் அம்மா, அக்காள், தங்கை மற்றும் மகள்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை அமைவதை உறுதி செய்ய வேண்டும்.

பெண்களும் தொழிலும்


கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, மலேசிய பெண்கள் தாங்கள் ஈடுபட்டுள்ள தொழில் துறையில் சில முன்னேற்றங்களைக் கண்டுள்ளனர்.எனினும், இது ஊதியமளிக்கும் தொழில்களில் மட்டும்தான் காணப்படுகிறது.ஆனால்,அவர்கள் செய்யும் ஊதியமில்லா தொழில்களில் [உதாரணம் :வீட்டுவேலைகள்,குழந்தைகள் வளர்ப்பு ] தொடர்ந்து அங்கிகரிக்க படாமலேயே உள்ளனர்.

  • கலாச்சார,மத நம்பிக்கைகள்,அரசியல் ஆர்வமின்மையும் வாய்ப்புகளும் ஆண் பெண் தொழில் சூழ்நிலைகளில் வேறுபாடுகளை உருவாக்கி வருகின்றன.
  • 2003 ல் மலேசிய தொழில் சக்தியில் பெண்கள் 47.7% [மகளிர் குடும்ப அமைப்பு மற்றும்
    சமுக மேம்பாட்டு 2004 புள்ளிவிபரப்படி ]
  • எனினும்,இவர்கள் பெரும்பாலும் குறைந்த திறமையும் அதிக உழைப்பும் உள்ள நிறுவனங்களில் பணிக்கமர்ப்பட்டுள்ளனர்.உதாரணத்திற்கு கடைகள் சந்தைகளிலுள்ள விற்பனை ஊழியர்கள் [17.4%]இயந்திரங்களை இயக்குபவர்களும் பொறுத்துபவர்களும் [12.1%] ஆரம்ப நிலைத் தொழிலாளர்களும் [11.9%] அதோடு முறைப்படியில்லாத துறைகளிலும். [மகளிர் ,குடும்ப ,சமூக மேம்பாட்டு அமைச்சின் 2004 புள்ளிவிபரப்படி ]
  • அதிகப் பெண்கள் மேலதிகார நிர்வாகப் பதவிகளில் இருந்தாலும் கூட ஆண்கள் எண்ணிக்கைதான் அதிகம் உள்ளது . 6.4% பெண்கள்தான் உயர்பதவியில் உள்ளனர். [மகளிர்,குடும்ப அமைச்சு ,சமூக மேம்பாட்டு அமைச்சின் 2004 புள்ளிவிவரப்படி ]
  • குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் தொடர்ந்து பெண்களின் முக்கிய பொறுப்பாகவே உள்ளன .
முக்கிய பிரச்சனைகள்
  1. தொழில் இடங்களில் பாரபட்சம்
  • சில தனியார் நிறுவனங்களில் பெண்கள் ஆண்களை விட விரைவாக ஓய்வு பெற வற்புறுத்தப்படுகின்றனர்.
  • பெண் தொழிலாளிகள் ,சட்ட பாதுகாப்புக் குறைவினால் இன்னும்பாலியல்பலாகாரத்திற்கு ஆளாகின்றனர்.
  1. இனப்பெருக்கத் தொழில்
  • ஆண்களுடன் ஒப்பிடும்போது இருமடங்கு பெண்கள் வீட்டு வேலைகளை கவனிக்கின்றனர்.இவ்வேலைக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை.30 வயதாகும் போது 16 % பெண்கள்,திருமணம் மற்றும் குடும்பக் காரணாங்களினாலும் வேலைக்கு செல்வதில்லை.
  • குழந்தை பிறப்புக்குப் பின்,தரமிக்க குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் குறைவினால் பெண்கள் தொடர்ந்து வேலை செய்யவோ அல்லது மீண்டும் தொழிலுக்கு செல்லவோ கஷ்டாமாக உள்ளது.
  1. உலகமயமாகுதலின் தாக்கம் :தொழில் பாதுகாப்பின்மை
  • குத்தகைத் தொழில் அதிகரிப்பு :நிரந்தரத் தொழிலில் கிடைக்கும் சலுகைகளும் பாதுகாப்பும் கிடையாது.
  • அதிகப் பெண்கள் தேவைப்படும்போது மட்டும் வேலைக்கும் எடுத்துக் கொள்ளப்படுவதால் முழுமையான சலுகைகளுக்கு தகுதி பெறுவதில்லை.உதாரணம் : மருத்துவ விடுமுறையும் வருட விடுமுறையும்.
  • நாள் சம்பள தொழிலின் காரணமாக எளிதில் பாதிப்புக்குள்ளாகும் தொழிலாளர்கள் ஒரு குழுவாக உள்ளனர். [உதாரணம் : தோட்டத் தொழிலாளர்களும் வெளிநாட்டுத் தொழிலாளர்களும். ]
  1. அமைப்புகளை உருவாக்கும் உரிமை
  • அதிகமான பெண்கள் வரி விலக்கு பெற்ற தொழில்பேட்டைகளில் பணிபுரிகின்றனர். இங்கு தொழிற்சங்கங்கள் அனுமதிக்கபடுவதில்லை.
  • மிகக் குறைவான பெண்கள் தொழிற்சங்கத்தலைமைப் பதவிகளில் அங்கம் வகிப்பதால் இவர்களின் விஷேசத் தேவைகள் கருத்தில் கொள்ளபடுவதில்லை.
  • தொழிற்சங்கவாதிகள் குறைந்தபட்ச சம்பளம் ரிங்கிட் மலேசியா 900 க்குப் போராடினாலும் சில கூட்டு ஒப்பந்தங்களில் இன்னும் ரிங்கிட் மலேசியா 360 க்கும் ரிங்கிட் மலேசியா 500 க்கும் இடையிலான சம்பளத்தையே நிர்ணயித்துள்ளனர்.
  • தொழில் சட்டங்கள் தொழிலாளர்கள் ஒன்று கூடி அவர்களின் தொழில் சூழ்நிலைகளை சீர்திருத்தம் செய்யும் உரிமையை ஒதுக்கி வைத்துள்ளன .
உங்களால் என்ன செய்ய முடியும் ?


  • உங்கள் இடத்திலுள்ள நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற பிரதிநிதியை நேரில் கண்டு அல்லது கடிதம் வாயிலாக உங்களின் தேவைகளைத் தெரிவியுங்கள் .
  • மகளிர் , குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சுக்கு மற்றும் மனித வள அமைச்சுகளுக்கு கடித வாயிலாக உங்கள் கருத்துகளை எடுத்துரைக்கவும்
  • குழுக்கள் அமைத்து உங்களது தேவைகளைப் பற்றி விவாதியுங்கள் அல்லது அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் பிரச்சாரங்களில் பங்கு கொள்ளுங்கள் .
கீழ்காண்பவைகளை செய்யும்படி அவர்களை துரிதப்படுத்தவும்
  1. தொழில் இடங்களில் பாரபட்சம் .
  • முறைப்படியில்லாத துறையையும் சேர்த்து பெண்களின் தொழிலில் ஏற்படும் மாற்றங்களின் வகைகளை ஆராய்ந்து வெளியிடுதல்.
  • பாலியல் பலாத்கார சட்டம் இயற்றுதல் .
  • ஆண்களும் பெண்களும் ஒரே வயதில் ஓய்வு பெறும் விருப்புரிமை அளித்தல்.
  • குறைந்தபட்ச சம்பளம் ,தொழில் பாதுகாப்பு , சமூக பாதுகாப்பு , ஆட்குறைப்பு / வேலையின்மை இன்சுரன்ஸ் குறித்த தொழில் சட்டத்தை மறு ஆய்வு செய்து திருத்துதல் . [சபா,சரவாக் உட்பட ]
  1. இனப்பெருக்கத் தொழில்
  • தரமான குழந்தை பராமரிப்பு வசதிகளை தொழில் இடங்களிலும் / சமூகங்களிலும் வழங்குதல் .
  • ஆண்களும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துக் கொள்ள ஊக்குவித்தல் .பள்ளிப் பாடத்திட்டதிலுள்ள ஆணுக்கு என்று பெண்ணுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள ஒரே மாதிரியான வேலை பணியை நீக்குதல் .செய்திசாதனங்களில் ஆணையும் / பெண்ணையும் பாலியல் கருவிகளாக காட்டப்படுவதையும் தவிர்த்தல் .
  1. உலகமயமாதலின் தாக்கம்
  • பெண்கள் பயிற்சி பெறவும் திறமைகளை வளர்க்கவும் வாய்ப்பளிப்பதையும் சேர்த்து தொழில் செய்ய உரிமை அளிக்கும் ஒரு தேசிய தொழில் கொள்கையை கொண்டிருத்தல் .
  • அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாக்கும் ஐக்கிய நாட்டு ஒப்பந்தத்தை மறு உறுதிபடுத்துதல் .
  1. அமைப்புகளை உருவாக்கும் உரிமை
  • தேசிய அளவில் தொழிலாளர்கள் விருப்பப்படும் தொழிற்சங்கம் அமைக்கும் வகையில் தொழிற்சங்க விதிமுறைகளை மறு ஆய்வு செய்து திருத்தும் செய்தல் .
  • எண் 87 இல் உள்ள சங்கங்களின் சுதந்திரத்தையும் அமைப்புரிமையின் பாதுகாப்பையும் குறித்த அனைத்துலக தொழில் அமைப்பின் ஒப்பந்தத்தை மறு உறுதிப்படுத்துதல் .

கனவான எதிர்ப்பார்ப்புகள் - பகுதி 1


மாலை வேளை. நாற்காலியில் அமர்ந்தவாறே, கடந்து வந்த பாதையைத் திரும்பி பார்த்தாள் ரேவதி. கண்களில் நீர் கொட்டியது. இதயம் கனத்தது. இப்பொழுது வருத்தப் பட்டு என்ன செய்வது; எல்லாமே முடிந்து போய் விட்டதே.மறப்போம் என்றாலும் முடியவில்லையே. புண் ஆறினாலும் வடு மறையாது என்பார்கள். அது போல் ஆகிவிட்டதே ரேவதியின் வாழ்க்கை.

*************************************************************************************

ஒரே வீட்டில் தொடர்ந்தார்ப்போல ஐந்து பெண் குழந்தைகள் பிறந்தாலே அரசனும் ஆண்டி என்பார்கள். ரேவதி குடும்பமும் அதற்கு விதி விலக்கல்ல. ரேவதியின் வீட்டில் ஐந்து பெண் குழந்தைகள். ரேவதிதான் மூத்த பெண். அப்பா இறந்து வெகு நாட்களாகி விட்டன. அம்மாவும் ஒரு நோயாளி. வறுமை தலை விரித்தாடியது.

இதற்கெல்லாம் ஒரு விடிவுக்காலம் வராதா என்று ரேவதியும் அவளது தங்கைகளும் ஏங்கினர். ஒரு நாள் பத்திரிகையில் வெளிவந்த விளம்பரத்தைப் பார்த்தாள் ரேவதி.
" வெளிநாட்டில் வேலை வாய்ப்பு"
வெளிநாடுகளில் வேலை செய்ய இந்திய பெண்கள்
தேவைப்படுகிறார்கள். கை நிறைய சம்பளம். நல்ல
தங்கும் வசதி. நல்ல வாய்ப்பினை நழுவ விடாதீர்.
தொடர்புக்கு : ரவி ( 013 - 2345678 )


விளம்பரத்தை படித்த அவளுக்கு மிக்க மகிழ்ச்சி. எனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் ஏன் குடும்ப வறுமையே தீர்ந்து விடுமே ஏன் எண்ணினாள். குடும்பத்தினருடன் கலந்துரையாடி விட்டு, ஏற்பாட்டாளர்களை வெளிநாட்டுக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டாள்.

குறிப்பிட்ட நாளில் குடும்பத்தினரிடமும், தெரிந்தவர்களிடமும் விடைப்பெற்றுக் கொண்டு விமானத்தில் ஏறி அமர்ந்தாள். அங்கே எல்லாமே புதியதாகவும், புரியாத புதிராகவும் இருந்தது அவளுக்கு. அவளை போன்று மேலும் சில பெண்மணிகள் வேலை தேடி வெளி நாட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தனர். மூன்று மணி நேரத்திற்கு பிறகு, சேர வேண்டிய விமான நிலையத்தை வந்தடைந்தாள்.

அங்கு அவளை அடையாளம் கண்ட ஓர் ஆடவர் தன்னை அறிமுகப்படுத்திய பிறகு, ரேவதியை அழைத்து சென்றார். ..

- தொடரும் ...


Friday, November 20, 2009

பெண்களும் தகவல் சுதந்திரமும்

அறிவு என்பது சக்தியாகும். தகவலைப் பெறுதல் அறிவை திறக்கும் சாவியாகும். தகவல் சுதந்திரமில்லாவிட்டால் மக்களின் வாழ்க்கைப் பாதிக்கும் விஷயங்கள் குறித்து அவர்கள் மிகக் குறைவாகவே குரல் கொடுக்க முடியும். அவர்களுக்குத் தெரிவதற்கு முன் பெட்ரோலுக்கு 30 சென் அதிகமாகவே அல்லது சாலை வரி அதிகரிப்போ இவர்களிடம் கலந்தாலோசிக்காமலேயே எடுக்கப்பட்டுள்ளதை அறிவார்கள். அவர்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.

தகவல்கள் தடையின்றி கிடைக்கவிட்டால், அரசுகளும் கம்பெனிகளும் தங்களின் செயல்களுக்கு பொறுப்பேற்பது கஷ்டமாகும். இதன் விளைவாக இந்நிறுவனங்கள் தண்டனைகளின்றி தவறு செய்ய எதுவாக இருக்கும். சரியான தகவல்கள் இல்லையென்றால் பெண்கள் உட்பட மக்கள் தங்களுக்கென உண்மையறிந்து தேர்வுகளைச் செய்ய இயலாது.

முக்கிய பிரச்சனைகள்

  1. தகவல் சுதந்திரத்துக்கு பொதுவான தடைகள் .
  • அடக்கு முறைச் சட்டங்களின் பயன்பாடு .

அச்சக பிரசுர சட்டம் 1984 , போன்ற அடக்குமுறைச் சட்டங்களில் பயன்பாடு. சமீபத்தில் 'சைனா பிரஸ் ''மூத்த ஆசிரியர்கள் இருவருக்கெதிராக இச்சட்டம் பயன்படுத்தப்பட்டது. ஒரு வீடியோ காட்சியில் நிர்வாணமாகத் தோப்புகரணம் போடுவது ஒரு சீன நாட்டு பெண் எனத் தவறாக செய்தி வெளியிட்டதற்காக ராஜினாமா செய்ய வற்புறுத்தப்பட்டன.

  • பொறுப்புடமையின்மையும் ஒளிவுமறைவின்மையும்

உள்நாட்டு அரசுகள் எவ்வாறு நிதியை செலவிடுகிறது என்பது குறித்து ஒளிவு மறைவின்றி வெளியிடும் பொறுப்புடைமை. (எட்ஜ் மலேசியா பத்திரிகையில் உள்நாட்டு சக்தி 22 டிசம்பர் 2003 )உள்நாட்டு அரசாங்கம் சிவி 13 மில் லியன் ஆண்டு வரவு செலவு கணக்கை எவ்வாறு கையாண்டது என்பது குறித்து தகவல் பொது மக்களுக்குத் தெரியது. அது எப்படி செலவிடப்பட்டது குறித்து அவர்கள் ஒன்றும் கருத்துரைக்க முடியாது.

  • திருத்தங்கள் செய்யப்பட வேண்டிய சட்டம் குறித்து போதிய தகவலின்மை .

இச்சட்டங்கள் அடிக்கடி மிக விரைவாக நாடாளமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்த மசோதாவைப் பற்றி விவாதித்து தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்கும் வாய்ப்பு பொது மக்களுக்கு மறுக்கப்படுகிறது. இதனால் மலேசியா குடிமக்களின் ஜனநாயக பங்ககெடுப்பு உரிமை குறைக்கப்படுகின்றது.

  • தகவல் சாதனைங்கள் அடக்குமுறைச் சட்டங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

அரசாங்கம் பத்திரிகை ஆசிரியருக்குரிய கொள்ளைகள் மீது அதிகாரம் செலுத்துகிறது. அடிக்கடி தணிக்கைக்கும் உள்ளாகின்றது. சிறப்பாக தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கிட கஷ்டமாகிறது. மிகக் கடுமையாக சூழ்நிலையில் அச்சக பிரசுர சட்டம் 1984 யைப் பயன்படுத்தி பத்திரிகையோ நிறுத்தி முடியும்.

. கல்வி சார்ந்த சுதந்திரமின்மையும் அடக்குமுரைச்சுழலும்

பல்கலைக்கழகங்களிலும் , பல்கலைக்கழகங்கள் வழியும் , பல்கலைக்கழக கல்லூரி சட்டம் 1971 வழியும் ஒப்பந்தமும் தகவல் வழங்குதளுக்கும் பெறுதலுக்கும் தடையாக உள்ளன.


2 பெண்கள் தகவல்கள் பெற மேலும் தடைகள்

. கடனுதவியும் மற்ற உதவி வசதிகளும் இருந்தும் , சொந்தத் தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு இப்படியான உதவிகள் இருப்பதே அல்லது இவற்றை எப்படி பெறுவது என்றே தெரியாமல் இருக்கின்றன .

. 4 மில்லியன் கிராமப்புற பெண்கள் கல் வியின்மையிலும் வறுமையிலும் இருப்பதால் அரசுக் கொள்ளைகள் , திட்டங்கள் , நிகழ்சிகள் வசதிகளினால் நன்மையடைவது கஷ்டமாகயுள்ளன . (மகளிர் , குடும்ப மேன்பாடு அமைச்சு ,2003)

. 52% பெண்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் . ஆனால் பெரும்பாலோருக்கு தாங்கள் வாக்களிக்கும் வேட்பாளர்கள் குறித்து அதிகம் எதுவும் தெரியாது . இம்மாதிரியான தகவல்கள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன . தகவல் சாதனங்களில் எளிதாகவும் கிடைக்காது . ஆண்களை போல் அதே வாய்ப்புகள் இருத்தும் பெண்களுக்கு இத்தகவல் மற்ற இடங்களிருந்து கிடைப்பதில்லை .[எ.கா அரசியல் கூட்டங்கள்]. [மலேசியா அரசு சார்பற்ற அமைப்பான பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாதங்கள் மீதான மாநாடு ]

. முடிவெடுக்கும் அமைப்புகளில் பெண்களின் குறைவான பிரதிநிதித்துவம் இருப்பதால் சட்டம் மீதான தகவல்கள் , கொள்ளைகள் , திட்டங்கள் , நிகழ்சிகள் மற்ற பெண்களுக்கு குறைவாகவே சென்றடைகின்றன .

. அடிப்படை தொடர்பு சாதனமின்மை , தகவல் தொடர்பு சாதனத் துறைக்கு செலுத்தும் அதிகமான கட்டணம் , பழக்கமில்லாத தகவல் தொடர்பு சாதனத்துறை , இணைய பயன்பாட்டில் ஆங்கில ஆதிக்கம் , குறைந்தளவு கல் வியறிவு , கணினித் துறையில் பயிற்சி பெறும் வாயிப்பின்மையும் மேலும் பெண்கள் தகவல் பெறக் கஷ்டமாக உள்ளது .

. பெண்கள் சட்ட புறக்கணிப்புக்கு காட்டுப்பாட்டிற்கும் ஆளாகுவதால் இவர்களின் நடவடிக்கைகள் அடக்கபடுகின்றன . இவர்களின் சட்ட உரிமைப் பற்றியும் குறைவாக தெரிந்திருக்கின்றனர்.

. ஆண் /பெண் சமத்துவம் குறித்து சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்கள் இல்லாமை பெண்அரசியல்வாதிகள் ஆண் /பெண் சமத்துவ வரவுசெலவு பட்டியலையும் பெண்களுக்கு நன்கு உதவக்கூடிய நிகழ்ச்சிகளையும் ஆதரிக்கத் தடையாக உள்ளது .

.தொடர்புசாதனங்கள் அடிக்கடி பெண்களை கருவிகளாகவும் பாரம்பரிய பாத்திரங்களிளுமே விவரிக்கின்றன .

3.நீங்கள் என்ன செய்யலாம் ?

.குழுக்கள் அமைத்து உங்களது தேவைகளைப் பற்றி விவாதியுங்கள் அல்லது அரசு சார்பற்ற அமைப்புகளின் பிராச்சரங்களில் பங்கு uகொள்ளுங்கள் .

.உங்கள் இடத்திலுள்ள நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற பிரதிநிதியை kநேரில் கண்டு அல்லது கடித வாயிலாக உங்கள் தேவையைத் தெரிவியுங்கள் .

.மகளிர் ,குடும்ப ,சமுக மேம்பாடு அமைச்சு ,கல்வி அமைச்சு ,தகவல் அமைச்சுக்கும் ,பிரதம மந்திரி இலாகாவிர்க்கும் எழுதவும் .

செயல்படத் தீவிரப்படுத்துங்கள்

.ஜனநாயக ஆட்சியையும் பெண்களின் மனித உரிமைகளை அனுசரித்தளையும் அடிப்படையாகக் கொண்ட தகவல் சுதந்திர சட்டம் இயற்றுதல் .

.பள்ளி ,பல்கலைநிலையம் ,கல்லூரி ,பல்கலைகழகப் பாடத்திட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இணைத்தல் .

.அதிகமானப் பொறுப்பு உடமையும் ஒளிவுமறைவின்றியும் கொண்ட தகவல்கள் பொது மக்களை சென்றடைவதை உறுதி செய்ய ஒரு சக்தி வாய்ந்த கண்காணிப்பு முறையைக் கொண்டிருத்தல் .

.தகவல் பெறும் உரிமைகளையும் பேச்சு சுதந்திரத்தையும் அத்துமீறும் அடக்குமுறை சட்டங்களை ரத்து செய்தல் அல்லது கட்டுப்படுத்தும் சட்டத்தை மறு ஆய்வு செய்து திருத்தம் செய்தல் .

.பத்திரிக்கை ஆசிரியர் கொள்கைகளில் ஆண்/பெண் சமத்துவத்தை தூண்டும் ஒரு தகவல் சாதன வழிகாட்டி குறியீட்டை உருவாக்குதல் .அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் ஆண்/பெண் சமத்துவ பயிற்சியளித்தல். முடிவெடுக்கும் பதவிகளில் அதிகமான ஆண்/பெண் சமத்துவ உணர்வுள்ள பெண்களை முன்னேற்றுதல் .

.எல்லாத் துறைகளிலும் ஆண்/பெண் சமத்துவ ரீதியிலான புள்ளி விபரங்களை உறுதி செய்தல் .

.பொது வாழ்கையில் பிரஜைகளின் குறிப்பாக பெண்களின் பங்கெடுப்பை அனுமதிக்க ஜனநாயகமும் ஆண்/பெண் சமத்துவ உணர்வுள்ள ஆட்சி அமைப்பு முறையையும் செயல் முறையையும் உறுதி செய்தல் .

.அனைத்துலக மனித உரிமை ஒப்பந்தங்களை உறுதிபடுத்த ஏற்றுக்கொள்ளுதல்.