Sunday, November 22, 2009
16 நாட்கள் பெண்கள் வன்முறையை எதிர்ப்போம் பிரச்சாரம்
பிரச்சாரத்தின் அறிமுகம்
16 நாட்கள் பெண்கள் வன்முறையை எதிர்ப்போம் என்பது உலகளவில் நடத்தப்பட்டு வரும் பிரச்சாரமாகும். இந்தப் பிரச்சாரமானது 1991- ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் தலைமை மையத்தினால் தொடங்கப்பட்டது. இந்தப் பிரச்சாரம் நவம்பர் 25 - அனைத்துலக பெண்கள் வன்முறையை எதிர்ப்பு தினத்திலிருந்து டிசம்பர் 10 - அனைத்துலக மனித உரிமை தினம் வரை கொண்டாடப்படும். பெண்கள் வன்முறை மனித உரிமைகளில் ஒன்று என்பதையும், பெண்களின் உரிமை பறிக்கப்பட்டால் அது மனித உரிமையைப் பறிப்பதற்கு சமம் என்பதையும் இந்தப் பிரச்சாரம் பிரதிப்பலிக்கிறது.
பிரச்சாரத்தின் நோக்கம்
வரும் காலத்தில் பெண்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான சூழ்நிலை வேண்டியதின் அவசியத்தைப் பற்றி மக்களுக்கும் பெண்களுக்கும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் பெண்கள் பல்வேறான வன்முறைகளை தங்களின் வாழ்நாட்களில் எதிர்நோக்கி வருகின்றனர். ஆகையால், அவர்கள் நன்றாக வாழ்வதற்கும், பாதுகாப்பாக வேலை செய்வதற்கும், வாழ்க்கையில் உயர்வதற்கும் பாதுகாப்பான சூழ்நிலை மிகவும் அவசியம். எனவே, மக்கள் அனைவரும் தங்கள் அம்மா, அக்காள், தங்கை மற்றும் மகள்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை அமைவதை உறுதி செய்ய வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment