கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, மலேசிய பெண்கள் தாங்கள் ஈடுபட்டுள்ள தொழில் துறையில் சில முன்னேற்றங்களைக் கண்டுள்ளனர்.எனினும், இது ஊதியமளிக்கும் தொழில்களில் மட்டும்தான் காணப்படுகிறது.ஆனால்,அவர்கள் செய்யும் ஊதியமில்லா தொழில்களில் [உதாரணம் :வீட்டுவேலைகள்,குழந்தைகள் வளர்ப்பு ] தொடர்ந்து அங்கிகரிக்க படாமலேயே உள்ளனர்.
- கலாச்சார,மத நம்பிக்கைகள்,அரசியல் ஆர்வமின்மையும் வாய்ப்புகளும் ஆண் பெண் தொழில் சூழ்நிலைகளில் வேறுபாடுகளை உருவாக்கி வருகின்றன.
- 2003 ல் மலேசிய தொழில் சக்தியில் பெண்கள் 47.7% [மகளிர் குடும்ப அமைப்பு மற்றும்சமுக மேம்பாட்டு 2004 புள்ளிவிபரப்படி ]
- எனினும்,இவர்கள் பெரும்பாலும் குறைந்த திறமையும் அதிக உழைப்பும் உள்ள நிறுவனங்களில் பணிக்கமர்தப்பட்டுள்ளனர்.உதாரணதத்திற்கு கடைகள் சந்தைகளிலுள்ள விற்பனை ஊழியர்கள் [17.4%]இயந்திரங்களை இயக்குபவர்களும் பொறுத்துபவர்களும் [12.1%] ஆரம்ப நிலைத் தொழிலாளர்களும் [11.9%] அதோடு முறைப்படியில்லாத துறைகளிலும். [மகளிர் ,குடும்ப ,சமூக மேம்பாட்டு அமைச்சின் 2004 புள்ளிவிபரப்படி ]
- அதிகப் பெண்கள் மேலதிகார நிர்வாகப் பதவிகளில் இருந்தாலும் கூட ஆண்கள் எண்ணிக்கைதான் அதிகம் உள்ளது . 6.4% பெண்கள்தான் உயர்பதவியில் உள்ளனர். [மகளிர்,குடும்ப அமைச்சு ,சமூக மேம்பாட்டு அமைச்சின் 2004 புள்ளிவிவரப்படி ]
- குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் தொடர்ந்து பெண்களின் முக்கிய பொறுப்பாகவே உள்ளன .
முக்கிய பிரச்சனைகள்
- தொழில் இடங்களில் பாரபட்சம்
- சில தனியார் நிறுவனங்களில் பெண்கள் ஆண்களை விட விரைவாக ஓய்வு பெற வற்புறுத்தப்படுகின்றனர்.
- பெண் தொழிலாளிகள் ,சட்ட பாதுகாப்புக் குறைவினால் இன்னும்பாலியல்பலாகாரத்திற்கு ஆளாகின்றனர்.
- இனப்பெருக்கத் தொழில்
- ஆண்களுடன் ஒப்பிடும்போது இருமடங்கு பெண்கள் வீட்டு வேலைகளை கவனிக்கின்றனர்.இவ்வேலைக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை.30 வயதாகும் போது 16 % பெண்கள்,திருமணம் மற்றும் குடும்பக் காரணாங்களினாலும் வேலைக்கு செல்வதில்லை.
- குழந்தை பிறப்புக்குப் பின்,தரமிக்க குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் குறைவினால் பெண்கள் தொடர்ந்து வேலை செய்யவோ அல்லது மீண்டும் தொழிலுக்கு செல்லவோ கஷ்டாமாக உள்ளது.
- உலகமயமாகுதலின் தாக்கம் :தொழில் பாதுகாப்பின்மை
- குத்தகைத் தொழில் அதிகரிப்பு :நிரந்தரத் தொழிலில் கிடைக்கும் சலுகைகளும் பாதுகாப்பும் கிடையாது.
- அதிகப் பெண்கள் தேவைப்படும்போது மட்டும் வேலைக்கும் எடுத்துக் கொள்ளப்படுவதால் முழுமையான சலுகைகளுக்கு தகுதி பெறுவதில்லை.உதாரணம் : மருத்துவ விடுமுறையும் வருட விடுமுறையும்.
- நாள் சம்பள தொழிலின் காரணமாக எளிதில் பாதிப்புக்குள்ளாகும் தொழிலாளர்கள் ஒரு குழுவாக உள்ளனர். [உதாரணம் : தோட்டத் தொழிலாளர்களும் வெளிநாட்டுத் தொழிலாளர்களும். ]
- அமைப்புகளை உருவாக்கும் உரிமை
- அதிகமான பெண்கள் வரி விலக்கு பெற்ற தொழில்பேட்டைகளில் பணிபுரிகின்றனர். இங்கு தொழிற்சங்கங்கள் அனுமதிக்கபடுவதில்லை.
- மிகக் குறைவான பெண்கள் தொழிற்சங்கத்தலைமைப் பதவிகளில் அங்கம் வகிப்பதால் இவர்களின் விஷேசத் தேவைகள் கருத்தில் கொள்ளபடுவதில்லை.
- தொழிற்சங்கவாதிகள் குறைந்தபட்ச சம்பளம் ரிங்கிட் மலேசியா 900 க்குப் போராடினாலும் சில கூட்டு ஒப்பந்தங்களில் இன்னும் ரிங்கிட் மலேசியா 360 க்கும் ரிங்கிட் மலேசியா 500 க்கும் இடையிலான சம்பளத்தையே நிர்ணயித்துள்ளனர்.
- தொழில் சட்டங்கள் தொழிலாளர்கள் ஒன்று கூடி அவர்களின் தொழில் சூழ்நிலைகளை சீர்திருத்தம் செய்யும் உரிமையை ஒதுக்கி வைத்துள்ளன .
- உங்கள் இடத்திலுள்ள நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற பிரதிநிதியை நேரில் கண்டு அல்லது கடிதம் வாயிலாக உங்களின் தேவைகளைத் தெரிவியுங்கள் .
- மகளிர் , குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சுக்கு மற்றும் மனித வள அமைச்சுகளுக்கு கடித வாயிலாக உங்கள் கருத்துகளை எடுத்துரைக்கவும்
- குழுக்கள் அமைத்து உங்களது தேவைகளைப் பற்றி விவாதியுங்கள் அல்லது அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் பிரச்சாரங்களில் பங்கு கொள்ளுங்கள் .
கீழ்காண்பவைகளை செய்யும்படி அவர்களை துரிதப்படுத்தவும்
- தொழில் இடங்களில் பாரபட்சம் .
- முறைப்படியில்லாத துறையையும் சேர்த்து பெண்களின் தொழிலில் ஏற்படும் மாற்றங்களின் வகைகளை ஆராய்ந்து வெளியிடுதல்.
- பாலியல் பலாத்கார சட்டம் இயற்றுதல் .
- ஆண்களும் பெண்களும் ஒரே வயதில் ஓய்வு பெறும் விருப்புரிமை அளித்தல்.
- குறைந்தபட்ச சம்பளம் ,தொழில் பாதுகாப்பு , சமூக பாதுகாப்பு , ஆட்குறைப்பு / வேலையின்மை இன்சுரன்ஸ் குறித்த தொழில் சட்டத்தை மறு ஆய்வு செய்து திருத்துதல் . [சபா,சரவாக் உட்பட ]
- இனப்பெருக்கத் தொழில்
- தரமான குழந்தை பராமரிப்பு வசதிகளை தொழில் இடங்களிலும் / சமூகங்களிலும் வழங்குதல் .
- ஆண்களும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துக் கொள்ள ஊக்குவித்தல் .பள்ளிப் பாடத்திட்டதிலுள்ள ஆணுக்கு என்று பெண்ணுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள ஒரே மாதிரியான வேலை பணியை நீக்குதல் .செய்திசாதனங்களில் ஆணையும் / பெண்ணையும் பாலியல் கருவிகளாக காட்டப்படுவதையும் தவிர்த்தல் .
- உலகமயமாதலின் தாக்கம்
- பெண்கள் பயிற்சி பெறவும் திறமைகளை வளர்க்கவும் வாய்ப்பளிப்பதையும் சேர்த்து தொழில் செய்ய உரிமை அளிக்கும் ஒரு தேசிய தொழில் கொள்கையை கொண்டிருத்தல் .
- அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாக்கும் ஐக்கிய நாட்டு ஒப்பந்தத்தை மறு உறுதிபடுத்துதல் .
- அமைப்புகளை உருவாக்கும் உரிமை
- தேசிய அளவில் தொழிலாளர்கள் விருப்பப்படும் தொழிற்சங்கம் அமைக்கும் வகையில் தொழிற்சங்க விதிமுறைகளை மறு ஆய்வு செய்து திருத்தும் செய்தல் .
- எண் 87 இல் உள்ள சங்கங்களின் சுதந்திரத்தையும் அமைப்புரிமையின் பாதுகாப்பையும் குறித்த அனைத்துலக தொழில் அமைப்பின் ஒப்பந்தத்தை மறு உறுதிப்படுத்துதல் .
No comments:
Post a Comment