Sunday, November 22, 2009

கனவான எதிர்ப்பார்ப்புகள் - பகுதி 1


மாலை வேளை. நாற்காலியில் அமர்ந்தவாறே, கடந்து வந்த பாதையைத் திரும்பி பார்த்தாள் ரேவதி. கண்களில் நீர் கொட்டியது. இதயம் கனத்தது. இப்பொழுது வருத்தப் பட்டு என்ன செய்வது; எல்லாமே முடிந்து போய் விட்டதே.மறப்போம் என்றாலும் முடியவில்லையே. புண் ஆறினாலும் வடு மறையாது என்பார்கள். அது போல் ஆகிவிட்டதே ரேவதியின் வாழ்க்கை.

*************************************************************************************

ஒரே வீட்டில் தொடர்ந்தார்ப்போல ஐந்து பெண் குழந்தைகள் பிறந்தாலே அரசனும் ஆண்டி என்பார்கள். ரேவதி குடும்பமும் அதற்கு விதி விலக்கல்ல. ரேவதியின் வீட்டில் ஐந்து பெண் குழந்தைகள். ரேவதிதான் மூத்த பெண். அப்பா இறந்து வெகு நாட்களாகி விட்டன. அம்மாவும் ஒரு நோயாளி. வறுமை தலை விரித்தாடியது.

இதற்கெல்லாம் ஒரு விடிவுக்காலம் வராதா என்று ரேவதியும் அவளது தங்கைகளும் ஏங்கினர். ஒரு நாள் பத்திரிகையில் வெளிவந்த விளம்பரத்தைப் பார்த்தாள் ரேவதி.
" வெளிநாட்டில் வேலை வாய்ப்பு"
வெளிநாடுகளில் வேலை செய்ய இந்திய பெண்கள்
தேவைப்படுகிறார்கள். கை நிறைய சம்பளம். நல்ல
தங்கும் வசதி. நல்ல வாய்ப்பினை நழுவ விடாதீர்.
தொடர்புக்கு : ரவி ( 013 - 2345678 )


விளம்பரத்தை படித்த அவளுக்கு மிக்க மகிழ்ச்சி. எனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் ஏன் குடும்ப வறுமையே தீர்ந்து விடுமே ஏன் எண்ணினாள். குடும்பத்தினருடன் கலந்துரையாடி விட்டு, ஏற்பாட்டாளர்களை வெளிநாட்டுக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டாள்.

குறிப்பிட்ட நாளில் குடும்பத்தினரிடமும், தெரிந்தவர்களிடமும் விடைப்பெற்றுக் கொண்டு விமானத்தில் ஏறி அமர்ந்தாள். அங்கே எல்லாமே புதியதாகவும், புரியாத புதிராகவும் இருந்தது அவளுக்கு. அவளை போன்று மேலும் சில பெண்மணிகள் வேலை தேடி வெளி நாட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தனர். மூன்று மணி நேரத்திற்கு பிறகு, சேர வேண்டிய விமான நிலையத்தை வந்தடைந்தாள்.

அங்கு அவளை அடையாளம் கண்ட ஓர் ஆடவர் தன்னை அறிமுகப்படுத்திய பிறகு, ரேவதியை அழைத்து சென்றார். ..

- தொடரும் ...


No comments:

Post a Comment